First General Body Meeting
மண்டைக்காடு பகவதி அம்மன் சேவா ஃபௌண்டேஷன் – ன் முதல் பொது குழுக் கூட்டமானது செப்டம்பர் 20-ஆம் தேதி மாலை 6:30 மணி முதல் இரவு 8:30 மணி வரை திட்டமிட்டபடி சிறப்பாக நடைபெற்றது. மாத்ரு தயா தலைவர் திருமதி.சியாமளா விஸ்வேஸ்வரன் அவர்கள் திருவிளக்கேற்றி ஆரம்பித்து வைத்தார். பூஜ்ய வெள்ளிமலை சுவாமிஜி ஆசி வழங்க, சக்திஸ்ரீ ஜெய்சங்கர் ஜி வாழ்த்துரை வழங்க, ஸ்ரீமான் வாமனன் ஜி சிறப்புரை வழங்கினார். ஸ்ரீ சரவணக்குமார் ஜி நமது திட்டங்கள் பற்றியும், கணக்கு வழக்குகள் பற்றியும் விளக்கினார். அகில பாரத ஐயப்பா சேவா சங்கத்தின் கௌரவத் தலைவர் அவர்களும் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்கள். நமது ஆடிட்டர் மணிகண்டன் ஜி அவர்கள் கலந்து கொண்டார். உறுப்பினர்களின் சந்தேகங்களுக்கு பதில் அளிக்கப்பட்டது. உறுப்பினர் சான்றிதழ்களும் வழங்கப்பட்டது. இதில் நமது உறுப்பினர் குடும்பத்தைச் சார்ந்த 270 நபர்கள் உற்சாகமாக கலந்து கொண்டார்கள். 8:30 மணிக்கு இரவு உணவுடன் நிகழ்ச்சி நிறைவு பெற்றது.

https://youtu.be/-78nPnIjO6s?si=LgxOzddbaUBoLAP3